மொரட்டுவை பல்கலையில் 15 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு

242 0

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 15 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் டெங்கு நுளம்புகள் பரவக்கூடியவாறு காணப்பட்ட இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை புகை அடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, டெங்கு நோய் பரவியதன் காரணமாக அண்மையில் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடப்படதுடன் 80 பல்கலைக்கழக  மாணவர்கள் அளவில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment