இருள் சூழ்ந்த தாயக மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் பேர்லின் அம்மா உணவகம். (காணொளி)

332 0

சிங்கள பேரினவாத அரசால் தாயகத்தில் எமது உறவுகள் இழந்தவைகள் சொல்லில் அடங்காதவை. தனது இன விடுதலைக்காக தன்னுயிரையும் தியாகம் செய்த தமிழ் மக்களின் உறவுகள் இன்று தனது அவயங்களை இழந்த நிலையில் வாழ்வாதாரத்துக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். தாயகத்தின் பல பகுதிகளிலும் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலையில் பல குடும்பங்கள் இருக்கின்றன. ஒரு வேளை உணவுக்கு கூட இவர்கள் பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும், மாணவர்களின் கல்வி நிலையையும் மேம்படுத்தவும்இருள் சூழ்ந்த தாயக மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் நோக்கில் யேர்மன் நாட்டின் தலைநகர் பேர்லினில் இருந்து “அம்மா உணவகம்” பேர்லின் வாழ் தமிழ் மக்களின் பேராதரவுடன் பல்வேறு உதவி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

மாணவர்கள் கல்வியை தொடரவும், பயனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு சுயதொழில்களை உருவாக்கி கொடுக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் வழங்கவும், சிறையில் உள்ளவர்களின் விடுதலையை நோக்கிய சட்டஉதவிகளை மேற்கொள்ளவும் என பல்வேறு வடிவங்களில் பேர்லின் நகர அம்மா உணவகத்தின் தாயகம் நோக்கிய மனிதநேய பணிகள் அமைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாயக மக்களின் துயர் துடைக்க அம்மா உணவகத்துக்கு தமது மனிதவலுவை வழங்கி முன்னிற்கும் அனைத்து பேர்லின் வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் தமது உளமார்ந்த நன்றிகளை பேர்லின் அம்மா உணவகம் தெரிவித்துக்கொள்கின்றது.

 

 

Leave a comment