சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென் மரணம்!

430 0

இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரும், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவருமான நிருபம் சென் புதுடெல்லியில் நேற்று காலமானார்.

பல்கேரியா, நோர்வே ஆகிய நாடுகளில் இந்தியாவின் தூதுவராகப் பணியாற்றிய நிருபம் சென், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையான காலத்தில் சிறிலங்காவுக்கான இந்திய தூதுவராகப் பணியாற்றியிருந்தார்.

அதையடுத்து, 2004ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக அவர் பணியாற்றினார்.

ஓய்வு பெற்ற பின்னர், ஐ.நா பொதுச்சபைத் தலைவரின் சிறப்பு மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

சிறிலங்காவில் நிருபம் சென் தூதுவராகப் பணியாற்றிய காலகட்டத்திலேயே, விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்தம் செய்து கொள்ளப்பட்டு, அமைதிப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மரணமாகும் போது, நிருபம் சென்னுக்கு வயது 70 ஆகும்.

Leave a comment