உமா ஓய வேலைத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் குழு

204 0

உமா ஓயா வேலைத்திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நோர்வே அரசாங்கத்தின் நிபுணர்கள் குழுவொன்று ஆகஸ்ட் மாதத்திஉமா ஓயா வேலைத்திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நோர்வே அரசாங்கத்தின் நிபுணர்கள் குழுவொன்று ஆகஸ்ட் மாதத்தில் வரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ல் வரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உமா ஓயா வேலைத்திட்டம் காரணமாக பண்டாரவள பிரதேச மக்கள் பலவேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அவர்களின் வீடுகளில் ஏற்படுகின்ற வெடிப்பு, குடிநீர் பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுத்து வருகின்றனர். அந்த பிரதேச மக்கள் இது தொடர்பாக அரசாங்கத்துக்கு தொடர்ந்து வழியுறுத்தி வந்தபோதும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையிலேயே கடந்த வாரம் உமா ஓயா வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பிரதேச மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையிலேயே உமா ஓயா வேலைத்திட்டத்தினால் மக்கள் உயிர்வாழ்வதற்கு ஏறபட்டுள்ள பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி வாசஸ்மதலத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment