1976ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

316 0

arrest_CIவடஅயர்லாந்தில் 1976 ஆம் ஆண்டு 10 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை இடம்பெற்ற பின்னர் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஐஆர்ஏ இயக்கத்தை சேர்ந்தவர்களால் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு இந்த 10 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.