வசீம் தாஜூதீனின் உடல் பாகங்கள் காணாமல் போன சம்பவத்திற்கு கொழும்பு மாவட்ட முன்னாள் சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா பதவி விலகுவதற்கு முன்னர் வசீம் தாஜூதீனின் உடல்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைக்கு கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாராஹேன்பிட்டியவில் வசிம் தாஜூதீனின் கொலை இடம்பெற்ற பின்னர் அவரது உடலை சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தி குறித்த சம்பவம் விபத்து என அறிக்கையிட்டிருந்தார்.
இதனை அடுத்து மருத்துவர் அஜித் தென்னகோன் தலைமையிலான சிறப்பு நிபுணர் குழு வழங்கிய அறிக்கையில் வசிம் தாஜூதீனின் மரணம் கொலை என நிரூபிக்கப்பட்டது.
சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக நியமிக்கப்பட்ட ஆனந்த சமரசேகர, வசிம் தாஜூதீனின் உடற் பாகங்களை சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்குக் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், அவர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு காலோ பொன்சேகா இறுதி அனுமதியை பெற்றுக்கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

