ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷூக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதற்கமைய ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி மூன்று நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனாவின் அழைப்பொன்றிற்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அந்த ஊடக தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

