ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது

272 0

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் வெலிக்கடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடை காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 25 கிராம் ஹெரோயின் பெகட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய பெண் ராஜகிரிய பிரதேசத்தினை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் அவர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment