மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

29620 0

டெங்கு காய்ச்சல் தொற்று காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று தொடக்கம் இரண்டு வார காலத்திற்கு கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலை மாணவர்கள் பெரும்பாலானவர்கள் மத்தியில் பரவிச் செல்லும் காய்ச்சல் நோய் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான ஏதுநிலைகள் உயர்ந்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் ஏனைய பணிகள் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment