ஐந்து காவல்துறையினருக்கு மரண தண்டனை

3397 17

இரண்டு பேரின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து காவல்துறையினருக்கு 27 வருடங்களின் பின்னர் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

1990ஆம் ஆண்டு பண்டாரகம என்ற இடத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது

பாணந்துறை நீதிமன்றத்தில் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டது.

அளுத்கமையை சேர்ந்த மொஹமட் மன்சூர் மற்றும் மொஹமட் முனாஸ் ஆகியோரின் கொலை தொடர்பிலேயே இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

மரண தண்டனை பெற்றவர்கள் அனைவரும் தெமட்டகொடை காவல்நிலையத்தில் கடமையாற்றிவர்களாவர்.

திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றன.

Leave a comment