யாழ் பல்கலைகழககத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்பு(காணொளி)

9896 0

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதிகளின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள, யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர்;; திறன் விருத்திற்கான கட்டடத்தொகுதி மற்றும் பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மாடிக்கட்டடம் ஆகியவற்;றை பல்லைக்கழகத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் நிதி உதவியுடன் குறித்த கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்கினேஸ்வரனின் அழைப்;பின் பேரில் வருகைதந்த உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்;ஸ்மன் கிரியெல்ல, இலங்;கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித்சிங் சந்து மற்றும் வடக்கு மாகாண ஆளுனர் றெஜிலோல்ட் குரே ஆகியோரால் வைபவரீதியாக குறித்த கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2014ம் ஆண்டு இலங்கை இந்திய அரசாங்;கங்;களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் கீழ் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் குறித்த கட்டடங்கள் சுமார் 550 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கட்டடங்களுக்கு தேவையான ஒரு தொகுதி இயந்திர சாதனங்கள், ஆய்வுகூட உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை பெற்றுக்கொடுக்கவும் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு சில வாகனங்களை பெற்றுக்கொடுக்கவும் இவ்வொப்;பந்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது,

 

Leave a comment