ஐ.எஸ் தீவிரவாதிகள் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்கள் அச்சுறுத்தலானவர்களாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்படுகின்றனர்.
இந்தநிலையில் அவர்கள் வெளிநாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

