அஞ்சல் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

6417 0

அஞ்சல் சேவை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட பல்வேறு திணைக்களத்தின் பல்வேறு அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக அஞ்சல் சேவை ஊழியர்கள் சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

பல கோரிக்;கைகளை முன்வைத்து கடந்த 3 நாட்களாக அஞ்சல் சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளை, அஞ்சல் நிலையங்களில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் தேங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment