32 இலங்கையர்களை நாடு கடத்தியது பல்கேரியா!

340 0

பல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கையர்கள் 32 பேர் சிறப்பு விமானம் மூலம்சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

32 பல்கேரிய குடிவரவு அதிகாரிகளின் பாதுகாப்புடன் குறித்த 32பேரும் நேற்று முன்தினம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இத்தாலிக்குச் செல்லும் நோக்குடன் ஆட்கடத்தல் முகவர்களால் இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஆட்கடத்தல் முகவர்களால் துருக்கியில் கைவிடப்பட்ட நிலையில், இத்தாலிக்குச் செல்லும் நோக்குடன் பல்கேரியாவுக்குள் நுழையும்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

பல்கேரிய அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட 32 இலங்கையர்களையும் பொறுப்பேற்ற சிறிலங்கா குடிவரவு அதிகாரிகள்இ அவர்கள் அனைவரையும் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.

Leave a comment