250 மில்லியன் ரூபாவில் 75 மில்லியன் ரூபா ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரிக்கு!

250 0

அரசாங்கத்தால் கல்விக்காக வழங்கப்பட்ட 250 மில்லியன் ரூபாவில் 75 மில்லியன் ரூபா ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரிவித்தார்.

ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் கல்வி பயில்வதற்கு தேசிய பாடசாலைகள் 10,122 காணப்படுவதாகவும், இதில் 9700 பாடசாலைகள் மாகாணங்களுக்கு கீழ் இயங்கி வருகின்றன எனவும், அவற்றில், மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் தமிழ் பாடசாலைகள் மாத்திரம் 844 உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

இவை அனைத்திலும் முதல் இடத்தை வகிக்கின்ற பாடசாலையாக ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். எனவே, இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் கட்சி பேதங்கள் இன்றி செயற்பட வேண்டுமெனவும் இராதாகிருஸ்னண் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment