சம்பூர் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலைய வேலைத்திட்டத்தை கைவிட தீர்மானம்

500 0
இந்திய மற்றும் ஜப்பானின் கூட்டு நிதியில் திருகோணமலை – சம்பூரில் நிர்மாணிக்கப்படவிருந்த இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலைய வேலைத்திட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுகின்ற நிலையில் இந்த திட்டம் கைவிடப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 2013 அங்கு நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
எனினும் இதற்கு பொதுமக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் என்பன எதிர்ப்பின் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment