மலிங்கவுக்கான ஒத்திவைக்கப்பட்ட தடையானது இந்திய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரை பாதிக்காது

837 0

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒத்திவைக்கப்பட்ட தடையானது, எதிர்வரும் இந்திய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரை பாதிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கிரிக்கட் இதனைத் தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளின் படி, 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கால இடைக்காலத் தடை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் அவர் ஒப்பந்தத்தை மீறி செயற்படும் பட்சத்தில், ஒருவருட காலத்துக்கு கிரிக்கட் விளையாட தடை விதிக்கப்படும்.

மேலும் அடுத்து அவர் விளையாடும் ஒருநாள் போட்டியில் பெறும் வேதனத்தின் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிட்;டுள்ளது.

நேற்று ஒன்று கூடிய சிறிலங்கா கிரிக்கட்டின் மத்திய செயற்குழுவின் முன்னால் அவர் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவர் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் மலிங்க பங்கேற்க உள்ளார்.

Leave a comment