ரென்சம் வெயர் கப்பம் பெறும் மென்பொருள் மீண்டும் தாக்கம்

1923 0

உலக நாடுகளில் பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை, ரென்சம் வெயர் எனப்படும் கப்பம் பெறும் மென்பொருட்கள் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய, யுக்ரெயின், ரஷ்யா, போலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் 2000க்கும் அதிகமான கப்பம்பெறும் மென்பொருள் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் மின்னுற்பத்தி நிலையங்கள், அணுஉலைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மையங்களின் கணினிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கணினிகள் முடக்கப்பட்டிருப்பதுடன், அவற்றை மீள இயக்கவும், களவாடப்பட்டுள்ள தகவல்களை மீண்டும் வழங்கவும், பிட்கொயின் ஊடாக பணம் செலுத்துமாறு குறித்த மென்பொருட்கள் அச்சுறுத்தியுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதற்கு முன்னரும் பல நாடுகளில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த தாக்குதலை வடகொரியாவில் செயற்படும் கணினி இணைய முடக்கலாளர்களே மேற்கொண்டிருப்பதாக முன்னர் தகவல் வெளியாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment