சிரியாவின் மீண்டுமொரு இரசாயன தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை

236 0

சிரியாவின் மீண்டுமொரு இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த தகவல் சிரிய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இராசாயன தாக்குதல் போன்று இது அமையும் எனவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

முன்னர் மேற்கொள்ளப்பட்;ட இரசாயன தாக்குதலின் காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்படைந்ததனை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியாவின் வான்படை தளங்களை தாக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மேலும் ஒரு இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அது பாரதூரமான தாக்கத்தை சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர ஈராக் மற்றும் சிரியாவில் நிலைக்கொண்டுள்ள ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment