கிளிநொச்சி உதயநகரிலுள்ள முன்பள்ளி ஒன்றின் கூரை காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது(காணொளி)

708 0

கிளிநொச்சியில் இன்று முற்பகல் வீசிய பலத்த காற்றினால், உதயநகரில் அமைந்துள்ள சிறுவர் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது.
கூரை தூக்கி வீசப்படும்போது மூன்று ஆசிரியர்களும், 30இற்கும் மேற்ப்பட்ட மாணவர்களும், குறித்த கட்டிடத்திற்குள் இருந்துள்ளதாகவும், இருப்பினும் எவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்ப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முன்பள்ளிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கிராம மட்ட அமைப்புக்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர், கிராம சேவையாளர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் சம்பவம் தொடர்பாகவும், இதற்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
இதன்போது அக்கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் முன்பள்ளியை புனரமைத்து தருவதாக கூறியுள்ளனர்.
இருப்பினும் குறித்த முன்பள்ளி எவ்வித அடிப்படை வசதிகளுமின்றிஇயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment