சம்பந்தன் – விக்னேஸ்வரன் விரைவில் சந்திப்பு

350 0

வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் பதவி தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இவ் வாரத்திற்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, தெரியவந்துள்ளது.

வட மாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசன் ஆகியோர், தம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து பதவி விலகினர். இதனையடுத்து, இரு அமைச்சுக்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் பொறுப்பேற்கப்பட்டது. மேலும், குறித்த பதவிக்கு வேறு இருவரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், இந்தப் பதவிகளுக்கு யாரைத் தெரிவு செய்வது என்பது தொடர்பிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment