முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்;குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என, மாணவர்களின் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்;லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் விமானப்படையினர் வசமிருந்த தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் மார்ச்மாதம் முதலாம் திகதிவரையும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் மீள்குடியேற அனுமதிக்கப்;பட்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றியே வாழ்ந்து வருகின்றனர்.
அப்பகுதியில் பாடசாலை வசதிகள் எதுவுமில்லாத நிலையில் அங்குள்ள 15 வரையான மாணவர்கள், முன்பள்ளிச்சிறார்கள் வற்றாப்பளைக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், குறித்;த பகுதிக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு பல்வேறு தரப்புக்களிடமும் கோரிக்கை விடுத்தபோதும் இன்றுவரை எந்தவித முன்னேற்றங்களும் இல்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

