கிளிநொச்சி பொதுச்சந்தைப்பகுதியில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

399 0

கிளிநொச்சி பொதுச்சந்தைப்பகுதியில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்;றது.

கிளிநொச்சி நகரத்திட்டமிடலுக்கு அமைவாக கிளிநொச்சி பொதுச்சந்தையில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், மாகாண சபை உறுப்பினர்;களான த.குருகுலராஜா, பசுபதி அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கரைச்சிப்பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், சந்தை வர்த்தக சங்;கம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி பொதுச்சந்தை பகுதியில் புதிய கடைத்தொகுதிகளை அமைப்பதற்கும்; தீ அணைப்புப்பிரிவினை நிறுவுவதற்கும் மீள்குடியேற்ற அமைச்சினால் நிதியொதுக்கீடு செய்யப்;பட்;டுள்ளது.

கடைத்தொகுதிகளை அமைப்பதற்கு தற்போது 80 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப் பெற்றுள்ளது என்றும், நவீன வசதிகளைக் கொண்ட 124 கடைகள் வாகனத்தரிப்பிடங்கள் என்பவற்றை உள்;ளடக்கிய வகையில் குறித்த சந்தைத் தொகுதியை முழுமைப்படுத்துவதற்கு ஆயிரம் மில்லியன் ரூபா நிதி தேவையெனவும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதற்கான திட்டங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டு முன்மொழிவுகளுக்காக இன்றையதினம் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment