மன்னாரில் தபால் ஊழியர்கள் இரண்டாவது தடவையாக அடையாள வேலை நிறுத்தத்தில்….(காணொளி)

12626 0

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் அஞ்சல் அலுவலக பணியாளர்களும் அடையாள வேலை நிறுத்தத்தை நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய மன்னார் பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் மன்னாரில் உள்ள உப அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றில் கடமையாற்றுகின்ற பாணியாளர்கள் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக மன்னாரில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இதனால் பல்வேறு தேவைகளுக்காக அஞ்சல் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment