வட மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள கல்வி அமைச்சர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை

256 0
வட மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள கல்வி அமைச்சர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கிய பதிலிலேயே முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றமை உண்மையா? என ஊடகவியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இதில் எந்தவித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யார் யாரை நியமிப்பது என்பது சம்பந்தமாக தம்மால் முடிவெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரியநேரத்தில் தம்மால் குறிப்பிட்ட நியமனங்கள் செய்யப்படும் என்றும், பதவிவிலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை தற்பொழுது தாமே  மேற்பார்வை செய்துவருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட மாகாண கல்வி அமைச்சராக தமது பெயர் கட்சியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னல்ட்  தெரிவித்தார்.
இந்த பெயர் பரிந்துரை தொடர்பாக முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் தமது கட்சி எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a comment