கேப்பாபுலவு மக்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ! ஜனாதிபதி செயலகம் செல்ல பொலிசார் தடை

898 0

கேப்பாபுலவு மக்கள் தமது சொந்தநிலம் கோரி கடந்த மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று 119  ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்றையதினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்

சம உரிமை இயக்கம் முன்னிலை சோஷலிச கட்சி மற்றும் கேப்பாபுலவு மக்கள் இணைந்து இன்றுகாலை 10.30  மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்

அதன்பின்னர் ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாக சென்றபோது பொலிசார் வீதி தடையை ஏற்ப்படுத்தி கலகமடக்கும் பொலிசார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள வாகனங்கள் சகிதம் வருகைதந்து போராட்ட காரர்களை இடைமறித்தனர்

பின்னர் போராட்டக்காரர்களில் ஒருதொகுதியினரை பொலிசார் ஜனாதிபதி செயலகம் அழைத்து  சென்று அங்கு ஜனாதிபதியின்  செயலாளரோடு சந்திப்பொன்றை ஏற்ப்படுத்தி கொடுத்தனர்

சென்றவர்கள் சந்திப்பை முடித்து வரும்வரை குறித்த இடத்திலேயே தரித்து நின்ற போராட்ட காரர்கள் சந்திப்புக்கு சென்றவர்கள் வருகை தந்ததும் அவ்விடத்தைவிட்டு கலைந்து சென்றனர் 

hdr

Leave a comment