அரசியல் நோக்கங்களுக்காக குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி – கல்வியமைச்சர்

332 0

சந்தர்ப்பவாத அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள திட்டமிட்ட வகையில் சட்டவிரோத சம்பவங்களை உருவாக்கி, அவற்றை அடிப்படையாக கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிப்புறக்கணிப்புகளை மேற்கொள்ள சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை தூண்டும் வகையிலான 21 சம்பவங்கள் மற்றும் சுகாதார அமைச்சுக்குள் புகுந்து அதனை கைப்பற்றிய சம்பவம் ஆகியவற்றின் மூலம் இதனை காணமுடிகிறது.

அரசாங்கம் இது குறித்து மிகவும் அவதானிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.தெரணியாகல, சிறி சமன் மத்திய மகா வித்தியாலத்தின் இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தை விமர்சித்து, அரசாங்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் வகையில் சில ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன.எனினும் கடந்த ஆட்சி காலத்தில் போன்று தற்போதைய அரசாங்கம் ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment