கதிர்காமத்தில் பெண்ணொருவர் கொலை

216 0

கதிர்காமம் பிரதேசத்தில் நேற்று இரவு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் அந்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான பெண்ணொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் சடலம் கதிர்காமம் 2 ஆம் இலக்க பாலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொலை தொடர்பில் ஆண் ஒருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்றைய தினம் கதிர்காமம் பிரதேசத்தில் 19 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் கண்டுவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் கதிர்காமம் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a comment