வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் பரம்பல் சொல்வதென்ன!

3905 0

தமி­ழர்­க­ளின் பூர்­வீக பிர­தே­சôங்­க­ளான வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளது மருத்துவ மனைகளும் இன்று சிங்­கள மய­மா­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்த வகை­யில் வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளது அரச மருத்துவ மனை களும் சிங்­கள மருத்துவர்களது பரம்­ப­லுக்­குள்ளே அகப்­ப­டு­கின்­றன என்­றால் அதற்கு நிச்­ச­ய­மாக எமது தமிழ் மருத்துவர்கள் எமது சமூ­கத்­து­டன் ஒன்றி வாழ்­வ­தி­லி­ருந்து விலகி பிறந்த மண்ணை மறந்து தொழில் ரீதியில் வேற்று நாடுகளுக்குச் செல் வதே முக்­கிய கார­ண­மாக அமை­கி­றது.

அந்த வகை­யில் தற்­போ­தைய சிங்­கள மொழி பேசும் மருத்துவர்கள் மற்­றும் அத்­து­றை­சார் ஏனைய தர ஊழி­யர்­க­ளது பரம்­ப­லுக்கு இவ்­வி­தம் தமது மண்ணை விட்டு வெளி­யே­றும் தமிழ் மருத்துவத் து­றை­யி­னரே கார­ண­மா­கின்­ற­னர்.

பல்­க­லைக் கழக மருத்­துவ பீட அனு­ம­தி­யில் இன்று மாவட்ட மக்­கள் தொகையே பிர­தான பங்கை வகிப்­ப­த­னால், ஒரு மருத்துவர் உரு­வா­கு­வ­தில் நிச்­ச­ய­மாக மக்­க­ளுக்­கும் பங்கு உண்டு . அதன் பின்­னர் பல்­க­லைக் கழ­கத்­தில் வழங்­கப்­ப­டும் இல­வசக் கல்­விக்­காக அரசு செல­வி­டும் நிதி­யி­லும் மக்­க­ளின் வரிப்­ப­ணப் பங்­க­ளிப்பு உண்டு.

இதனைவிட, வன்­னி­யிலே முல்­லைத்­தீவு , கிளி­நொச்சி , மன்­னார் மாவட்­டங்­க­ளில் இருந்து பல்­க­லைக் கழ­கத்­துக்­குத் தெரி­வா­கும் மாண­வர்­க­ளின் நல­னுக்்­காக மாவட்­டத்­தின் வரு­மா­னத்­தின் ஊடாக ஓர் சிறு பகு­தி­கள் ஒதுக்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றாக க.பொ.த உயர்தரத்­தின்­போது சிறந்த பெறு­பேற்­றைப் பெற்று மருத்­துவ பீடத்­திற்கு தெரி­வா­கும் சம­யம், ஊட­கங்­க­ளின் முன்­னால் பல கருத்­துக்­களை கூறி­ய­ வர்­க­ளில் பலரை இன்று நாட்­டி­லேயே காண முடி­ய­வில்லை. மருத்து வர்களது போக்­கில் குறை கண்­டு­பி­டிப்­பது இதன் நோக்­க­மல்ல. மாறாக வடக்­கின் இன்­றைய தொழில்­சார் நில­வ­ரத்­தின் பிர­தி­ப­லிப்பை வெளிக்­கொ­ண­ர­வேண்­டிய கட்­டாய தேவை ஏற்­பட்­டுள்­ளது.

வட­மா­காண மருத்துவமனைக­ளில் சிங்­கள மருத்துவர்கள் அதி­க­ரிப்பு

இன்று வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லும் வைத்­தி­யத்­துறை ஊழி­யர்­கள் அடிப்­ப­டை­யில் குறிப்பாக வைத்தி யர்கள் தொகையில் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்­குச் சிங்­கள மருத்துவர்கள் கடமையாற்றி வருகின்றனர். இதனை மாவட்­ட­ரீ­தி­யில் ஆராய்ந்­தால் யாழ்ப்­பாண மாவட்­டத்­திலே போதனா வைத்­தி­ய­சாலை உள்­ள­டங்­க­லாக அனைத்­துத் தரப்­பி­லும் மொத்­த­மாக 610 மருத்துவர்கள் தேவை­யா­க­வுள்­ள­போ­தி­லும், 467 மருத்துவர்களே தற்­போது பணி புரி­கின்­ற­னர்.

இங்கே அதிர்ச்­சி­யான விட­யம் என்­ன­வெ­னில் இவர்­க­ளில் 197 பேர் மட்­டுமே யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மா­கக் கொண்­ட­வர்­கள் . இதே­போன்று ஏனைய மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் 103 பேர் . அதே­ச­ம­யம் 132 பேர் சிங்­கள மருத்துவர்க ளும் 35 முஸ்­லீம் மருத்துவர்களும் யாழ்.மாவட்ட வைத்­தி­யசாலைக­ளில் பணி­பு­ரி­கின்­ற­னர்.

இதே­போன்றே கிளி­நொச்சி மாவட்­டத்தை எடுத்­துக்­கொண்­டால் அந்த மாவட்­டத்­துக்கு 94 மருத்துவர்கள் தேவை­யான நிலை­யில் 86 மருத்து வர்கள் மட்­டுமே தற்­போது பணி­யில் உள்­ள­னர். ஆனா­லும் கிளி­நொச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த 14 பேர் மட்­டுமே அந்த மாவட்ட மருத்துவமனை­க­ளில் பணி­பு­ரி­யும் அதே நேரம், ஏனைய மாவட்­டங களைச் சேர்ந்த 21 தமிழ் மருத்துவர்கள் பணி­ பு­ரி­கின்­ற­னர். அதே­ச­ம­யம் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 50 சிங்­கள மருத்து வர்களும் ஒரு முஸ்லிம் வைத்தியரும் பணி­பு­ரி­யும் நிலமை காணப்­ப­டு­கின்­றது.

இதே­போன்றே வவு­னியா மாவட்­டத்­துக்கு 111 மருத்துவர்கள் தேவை­யுள்ள நிலை­யில் 102 மருத்துவர்கள் மட்­டுமே அந்த மாவட்­டத்­தில் பணி­பு­ரி­கின்­ற­னர். இந்த நிலை­யில் வவு­னியா மாவட்ட மருத்துவர்கள்24 பேர் மட்­டுமே பணி­பு­ரி­வ­தோடு ஏனைய மாவட் டங்­க­ளைச் சேர்ந்த தமிழ் மருத்துவர் களாக 21பேரும் பணி­பு­ரி­கின்­ற­னர். எஞ்­சிய 50 மருத்துவர்கள் சிங்­கள மொழி பேசும் மருத்துவர்களும் 7 முஸ்லிம் மருத்துவர்களும் காணப்­ப­டு­ கின்­ற­மை­யும் குறிப்­பி­டத்­தக்­கது.

முல்­லைத்­தீவு மாவட்ட மருத்துவமனைக­ளி­லும் பாதிக்­குப் பாதி சிங்­கள மருத்துவர்களே

இவ்­வாறே முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு 98 மருத்துவர்கள் தேவைப் படும் நிலையில் சகல மருத்துவமனை­க­ளி­லும் 60 மருத்துவர்கள் பணி­யாற்­றுகின்றனர். இவர்களில் 8 மருத்து வர்களே அந்த மாவட்­டத்­தைச் சொந்த இட­மாக கொண்­ட­வர்­கள். அதே­போன்று வடக்­கின் ஏனைய மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 12 மருத்துவர்கள் இங்கு பணி­யாற்­று­வ­தோடு எஞ் சிய30 மருத்துவர்களில் 29 பேர் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த சிங்­கள மொழி பேசும் மருத்துவர்­க­ளா­க வும் ஒருவர் முஸ்லிம் மருத்துவராக வும் காணப்­ப­டு­கின்­ற­னர்.

இதே­நே­ரம் மன்­னார் மாவட்­டத்­திலே மாவட்ட மருத்துவமனைகளில் மொத்­தம் 18 மருத்துவ நிபு­ணர்­க­ளும் 49 மருத்துவர்­க­ளு­மாக மொத்­தம் 67 பேர் பணி புரி­கின்­ற­னர்.

இதில் நிபு­ணர்­கள் 18 பேரில் 6பேர் மட்­டுமே தமி­ழர்­க­ளா­க­வும் ஒரு­வர் முஸ்­லீம் இனத்­த­வராக உள்­ள­தோடு எஞ்­சிய 11பேரும் சிங்­கள மொழி பேசும் மருத்துவர்்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­ற­னர். 49 மருத்துவர்களில் 4பேர் மட்­டுமே தமிழ் மருத்துவர்கள். அதே­போன்று 4பேர் மட்­டுமே முஸ்­லீம் மருத்துவர்களும் காணப்­ப­டு­வ­தோடு எஞ்­சிய 41மருத்துவர்களும் சிங்­கள மருத்துவர்களே காணப்­ப­டு­கின்­ற­னர்.

இதே­போன்று மன்­னார் மாவட்­டத்­தின் ஏனைய மருத்துவமனைக ளுக்கு 63 மருத்துவர்கள் தேவைப்­ப­டும் நிலை­யில் 32மருத்துவர்கள்மட்­டுமே பணி­பு­ரி­கின்­ற­னர். இவர்­க­ளி­லும் 19 மருத்துவர்கள்தமிழ் மருத்துவர்க­ளா­க­வும் இரு மருத்து வர்கள் முஸ்லிம் மருத்துவர்களா­க­வும் ஏனைய 11பேரும் சிங்­கள இனத்­தைச் சேர்ந்த மருத்துவர்க­ளா­க­வும் உள்­ள­னர்.

அதா­வது மாவட்­டத்­தின் மொத்த மருத்துவர்கள் தேவையோ 123 ஆக உள்ள நிலை­யில் தற்­போது 99பேர் மட்­டுமே பணி­யில் உள்­ள­னர். இவர்­க­ளில் 29பேர் மட்­டுமே தமிழ் மருத்துவர்கள் 7 முஸ்லிம் மருத்துவர்களும் சிங்­கள இனத்­த­வர்­க­ளான 63 மருத்துவர்கள் பணி­யாற்­று­கின்­ற­மை­யும் குறிப்­பி­டத்­தக்­கது.

இவற்­றின் அடிப்­ப­டை­யில் வட மாகா­ணத்­தின் ஒட்டு மொத்த மருத்துவ மனைகளுக்கு மொத்­த­மாக 1036 மருத்துவர்கள் தேவை­யா­ன­போ­தி­லும் 814 மருத்துவர்களே கட­மை­யாற்­று­கின்­ற­னர். இவ்­வி­தம் பணி­யி­லுள்ள 814 மருத்துவர்களிலும் 443 மருத்துவர்கள் மட்­டுமே தமிழ் மருத்து வர்கள் என்­ப­தும் குறிப்­பி­ட­ வேண்­டி­தோர் விட­ய­மா­கின்­றது. 51 முஸ்லிம் மருத்துவர்கள் பணி­யாற்­று­வ­தோடு 320 சிங்­கள மருத்துவர்கள் பணி­யாற்­று­கின்­ற­னர் என்­ப­தும் குறிப்­பி­டத் தக்­கது.

Leave a comment