முஸ்லிம்களின் உடமைகள் சேதப்படுத்தப்படுவதுடன், உரிமைகள் மீறப்படுகின்றன – சந்திரிக்கா

247 0
இலங்கை வாழ் இஸ்லாமியர்களுக்கு எதிராக இன ரீதியான முரண்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளபோதும் காவல்துறை உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை குறிப்பிட்டார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் எதிர்ப்பு கோஷங்களுடனான வன்முறை செயல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.
இதற்கு பௌத்த பிக்கு ஒருவர் தலைமை தாங்குகின்றார்.
முஸ்லிம்களின் உடமைகள் சேதப்படுத்தப்படுவதுடன், உரிமைகள் மீறப்படுகின்றன.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உத்தரவு வழங்கியுள்ளனர்.
எனினும் காவல்துறையினர் தமது கடமையை நிறைவேற்றுவதில் பின் நின்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எது எவ்வாறெனினும், இந்த தாக்குதல் தொடர்பில் சிங்கள பௌத்தர்கள் சார்பில் தாம் முஸ்லிம் மக்களுக்கு தமது கவலையை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டார்.

Leave a comment