விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை: தேர்தல் கமி‌ஷனில் கனிமொழி புகார்

213 0

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி திமுக சார்பில் தேர்தல் கமி‌ஷனில் மாநிலங்களவை எம்.பி. கனிமொழி புகார் அளித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்த போது பணப்பட்டுவாடா தொடர்பாக சில ஆதாரங்கள் சிக்கியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. கனிமொழி டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷனில் நேரில் சென்று இன்று புகார் மனு ஒன்றினை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக உரிய விசாரணை நடத்த திமுக சார்பில் மனு அளித்தோம். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஆணையரிடம் தந்தேன்.ஆர்.கே.நகரில் பணம் விநியோகித்தவர்கள் பெயர்களை அதிகாரிகள் மறைத்துவிட்டனர். விஜயபாஸ்கர் இல்ல சோதனையில் பணம் விநியோகித்தவர்கள் பெயர்கள் இருந்தன.

அனைத்து தகுதிகளும் உள்ளதாலேயே மீராகுமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a comment