கீதா மனுவில், இடையீட்டு தரப்பினராக தலையிடுவதற்கு அனுமதிக்குமாறு பியசேன கமகே கோரிக்கை

465 0

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள மனுவில், இடையீட்டு தரப்பினராக தலையிடுவதற்கு அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த மனு எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு பிரதம நீதியரசர் பிர்சாத் டெப் தலைமையினரால் மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம் இன்று தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக தாம் செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி, கீதா குமாரசிங்க குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment