வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின் படி நூற்றுக்கு 6.28 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட கட்டணம் போக்குவரத்து ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி குறைந்த கட்டணமாக இருந்த 9.00 ரூபா 10.00 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 12 ரூபா கட்டணங்கள் 13 ரூபாவாகவும், 16 ரூபா கட்டணங்கள் 17 ரூபாவாகவும், 20 ரூபா கட்டணங்கள் 21 ரூபாவாகவும், ஏனைய கட்டணங்கள் 6.28 வீதப்படியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை அதிவேக வீதியின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹரகம – காலி 410 ரூபாவாகவும், மஹரகம – மாத்தறை 500 ரூபாவாகவும், கடுவலை – மாத்தறை 520 ரூபாவாகவும், கொழும்பு – மாத்தறை 530 ரூபாவாகவும்,கடுவலை – காலி 430 ரூபாவாகவும், கடவத்தை – மாத்தறை 540 ரூபாவாகவும், கடவத்தை – காலி 440 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பஸ் கட்டணங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை இந்த உள்ளீட்டில் பார்க்கலாம்

