திம்புள்ள பத்தனை – மேபீல்ட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பெண் தொழிலாளர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்தபோதே இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான 7 பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

