பாகிஸ்தானில் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்ட மஹிந்த தரப்பு!

253 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானின் அரச தலைவர்கள் மற்றும் முக்கிய இராஜ தந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவ் விஜயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு கடந்த 19 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு அங்கு தங்கியிருந்து பலதரப்பட்ட சந்திப்புகளிலும் கலந்துகொண்டுவிட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் தொடர் வெளிநாட்டு விஜயங்கள் தேசிய அரசியலில் மாத்திரமல்லாது பன்னாட்டு இராஜதந்திர துறையினர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவை டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த விஜயத்திற்கான தயார்ப்படுத்தல்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பால் மும்முரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் திடீரென அவர் பாகிஸ்தானுக்கு செய்துள்ளமை முக்கிய விடயமாக அனைவராலும் நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment