சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

251 0

சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத்தில் செயற்பட்டவர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்    கடுமையாகச் சாடியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விடயத்தில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ. சிவஞானம் செயற்பட்ட விதம் தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியில் போட்டியிட இடம் வழங்காத போது தமிழ்க் காங்கிரசின் காலில் விழுந்து ஆசனம் வழங்குமாறு கோரியிருந்தார்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இரண்டு தடவைகள் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி கொண்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் தமிழரசுக் கட்சிக்கு ஓடினார்

தான் ஒருபோதும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கவில்லை எனப் பல தடவைகள் கூறியுள்ளார். எனவே, சீ.வீ.கே. சிவஞானம் ஒரு அரசியல் விபச்சாரி.

எங்களைப் பொறுத்தவரை வடமாகாண சபையில் காணப்படுகின்ற முதலமைச்சர் பதவியோ, அவைத்தலைவர் பதவிகளோ, அமைச்சர் பதவிகளோ தமிழ் மக்களுக்கு அடிப்படையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியதான கட்டமைப்புக்கல்ல.

 இதன் காரணமாக வடமாகாண சபை தொடர்பில் நாங்கள் பெரிதளவில் அக்கறை செலுத்துவதில்லை. விக்கினேஸ்வரன் ஐயாவை நாங்கள் ஆதரிப்பது வடமாகாண முதலமைச்சர் என்ற காரணத்துக்காக மட்டுமல்ல. அவர் நேர்மையானதொரு அரசியல்வாதி.

ஆகவே, அவரது கொள்கைகளுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு எதிராக நாமனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.

வடமாகாண அவைத்தலைவர் சிவஞானம் கடந்த வாரம் நடந்து கொண்ட விதம் தொடர்பாகத் தற்போது சர்ச்சைகள் உருவாகியிருக்கிறது. முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தன்னுடைய தலைமையில் மேற்கொள்வதற்கு எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பில் தற்போது கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளது.

அவைத்தலைவர் பதவி என்பது கட்சிப் பதவிகளுக்கு அப்பால் நடுநிலைமை வகிக்க வேண்டியதொரு பதவியாகும். ஒரு விவாதத்தின் போது அவர் சார்ந்த கட்சி தவறு செய்திருந்தாலும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அவைத்தலைவருக்குண்டு.

நடுநிலைமை வகிக்க வேண்டிய பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினராகக் கருதப்பட மாட்டார். வாக்கெடுப்பு இடம்பெறும் போது வாக்குகள் இரு தரப்புக்களிடையே பிரிந்திருக்கும் போது மாத்திரம் தான் அவருக்கு வாக்குரிமையுள்ளது. இது தான் வழமையான நடைமுறை.

வடமாகாண சபை எங்களைப் பொறுத்தவரை ஒரு வெற்றுக் கோசமாகவிருந்தாலும் கூட அவ்வாறான சபையில் ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. அந்த வகையில் வடமாகாண அவைத்தலைவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியின் கெளரவத்தைக் காப்பாற்றும் வகையில் செயற்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறான ஒருவரிடம் இருந்து நாங்கள் மேலதிகமாக எதனையும் எதிர்பார்க்க முடியாது. என்பது தான் யதார்த்தம். துரதிஷ்டவசமாகத் தந்தை செல்வநாயகம் ஐயா உருவாக்கிய தமிழரசுக் கட்சியிலிருக்கக் கூடிய மேல்மட்டம்.,

சீ.வீ.கே. சிவஞானத்தை ஒத்த பணமுடையவர்களாகத் தான் காணப்படுகிறார்கள். ஆகவே, இது தொடர்பில் எமது மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

Leave a comment