திருகோணமலை பாலம் போட்டாறு பிரதேசத்தில் கோர விபத்து! இருவர் பலி

380 0

திருகோணமலை – சீனன்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலம் போட்டாறு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

நிறுத்திவைக்கபட்டிருந்த பாரவூர்தியில் உந்துருளியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் முள்ளிப்பொத்தானை – அரபா நகரைச்சேர்ந்த 28 மற்றும் 20 வயதான இரு இளைஞர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதில் சம்பவித்த இடத்தில் ஒருவரும், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனன்குடா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

Leave a comment