பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள்!

272 0

அனர்த்தம் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்ட பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் 50,000 பேருக்கு 10,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதற்கமைய, எதிர்வரும் 23ம் திகதி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசர அனர்த்தம் மற்றும் வௌ்ள நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நூலகங்களை புனரமைப்பு செய்யும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு புத்தகப் பொதிகளை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகள் மூன்றை தைத்துக் கொள்ளக் கூடிய வகையில் துணி, சப்பாத்து ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர், அப்பியாசப் புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

மேலும், இதன்பொருட்டு அரசாங்கத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மாதச் சம்பளத்தை வழங்கியுள்ளதாகவும், அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment