வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

236 0

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சய்டம் நிறுவனத்திற்கு எதிரப்பு தெரிவித்து இன்றைய தினம் பரந்தளவிலான வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் சயிட்டம் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் விரைவான தீர்வொன்றை எடுப்பதற்கு வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வேலைநிறுத்தம் டெங்கு நோயாளர் வார்டுகள், கர்ப்பிணி மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படவில்லை என்று அந்த சங்கம் கூறியுள்ளது.

நேற்றிரவு கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்தியர் நலிந்த ஹேரத் கூறினார்.

இது தவிர சயிட்டம் நிறுவனத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் வைத்திய பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவினால் எற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மையினால் 96 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள் 06 பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க கூறினார்.

Leave a comment