பௌத்த தேரர்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க

405 0

அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அஸ்கிரிய மாநாயக்க தேரர் உட்பட பௌத்த தேரர்களிடம் நேற்று (21) மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

பௌத்த தேரர் தன் மீது அதிருப்தி கொண்டிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அஸ்கிரிய மாநாயக்க தேரர் உட்பட சங்க சபை நேற்று கூடிய போது வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தனக்கு எதிராக சில விடயங்களை முன்வைத்துள்ளதால், தான் அவர்களிடம் இந்த மன்னிப்பை கோரியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஞானசார தேரரின் பெயரை மாத்திரம் பயன்படுத்தி, மரியாதை இன்றி பேசுவதாக மாநாயக்க தேரர் தன் மீது குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த காலத்தில் ஞானசார தேரர், வெளிநாடுகளிலும் இலங்கையிலும் நடந்து கொண்ட விதத்தை எண்ணிப் பார்த்ததால், அவர் மீது இருந்த மரியாதை குறைந்து போனது என்றும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment