வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக சி.வீ.விக்னேஸ்வரன் இன்று பதவி பிரமாணம்

276 0

வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் , மாகாண சபை விவசாயம் மற்றும் கல்வி அமைச்சராக இன்று பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இந்த அமைச்சுக்களுக்கான பதிவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்திருந்தார்.

விவசாய அமைச்சராக இருந்த பீ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சராக இருந்த டீ.குருகுலராஜா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த தினம் குறித்த பதவியில் இருந்து விலகியிருந்தனர்.

இவர்கள் இருவரும் தமது பதவி விலகல் கடிதத்தை நேற்றைய தினம் வடமாகாண ஆளுநரிடம் கையளித்திருந்தனர்.

இவ்வாறாயினும் , குறித்த இரு அமைச்சுக்களுக்கும் புதிய அமைச்சர்கள் எதிர்வரும் தினத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வீ . விக்னேஸ்வரனால் நியமிக்கப்படுவார்கள் என எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருந்தார்

Leave a comment