மஞ்சள் கட்டைகளை கடத்திய நபர் கைது!

5109 20

மாத்தறை தலங்கல பிரதேசத்தில் மஞ்சள் கட்டைகளை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிட்டபெத்தர பிரதேசத்திற்கு முச்சக்கர வண்டியில் மஞ்சள்கட்டைகளை சட்டவிரோதமான முறையில் எடுத்து செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது 250 கிலோ கிராம் மஞ்சள்கட்டைகளை கடத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொறவக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment