பிரான்ஸின் இரண்டு கப்பல்கள் இலங்கையில் நங்கூரம்

4792 22

பிரான்ஸின் இரண்டு கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன. ‘Mistral’ மற்றும் ‘Courbet’ ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன. இந்த இரண்டு கப்பல்களுமே கடற்படை கப்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்ட்ரால் கப்பலில் 56 அதிகாரிகள் உள்ளிட்ட 431 படையினரும், கொர்பெட் கப்பலில் 18 அதிகாரிகள் உள்ளிட்ட 157 படையினரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

எதிர்வரும் 26ம் திகதி வரையில் இந்தக் கப்பல்கள் இரண்டும் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் இந்தக் கப்பல்களில் வந்துள்ள கடற்படையினர் பங்கேற்க உள்ளனர்.

Leave a comment