உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே நடத்தப்பட முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கெஃபே நடத்திய கருத்தரங்கு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்கள் குறித்த தேர்தல் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும் ஜுலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரால் கைச்சாத்திடப்படுவதற்கு மேலும் காலம் எடுக்கும்.
சபாநாயகர் கைச்சாத்திட்டதன் பின்னர், தேர்தல்களை ஒழுங்கு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு குறைந்த பட்சம் 75 நாட்கள் அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

