3.44 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்னகத்தே வைத்திருந்த பிரதிவாதியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 04ம் திகதி குறித்த நபர் கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் வைத்து காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

