திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல அனுமதி

400 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இம் மாதம் 23ம் திகதி முதல் அடுத்த மாதம் 12ம் திகதி வரையான காலப் பகுதியில் அவர் வௌிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உயர் கல்வியை மேற்கொண்டு வரும் தனது மகளை சந்திக்கவே அவர் அந்த நாட்டுக்கு செல்ல கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை கருத்தில் கொண்ட மேல் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a comment