இனவாத கருத்துக்களை எவர் முன்னெடுத்தாலும் சட்ட நடவடிக்கை

387 0

புதிய அரசியலமைப்பினை நிறுவி நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித்தரங்கே பண்டார தெரிவித்தார்.

நாட்டில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு இனவாத கருத்துக்களை எவர் முன்னெடுத்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment