இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வை-யை சந்தித்தார்

251 0
இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வை-யை சந்தித்தார். இருவரின் சந்திப்பில் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ப்ரிக்ஸ் மாநாடு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற இருக்கிறது.
ப்ரிக்ஸ் மாநாட்டில் இருநாட்டின் நிலைப்பாடு மற்றும் ப்ரிக்ஸ் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை உறுதி செய்வது குறித்து வி.கே. சிங் மற்றும் வாங் வை ஆலோசணை நடத்தியுள்ளனர். சீனாவுடன் இருந்து வரும் நல்லுறவை இந்தியா பலப்படுத்த விரும்புவதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
ஐந்து நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ப்ரிக்ஸ் மாநாடு செப்டம்பரில் நடைபெற இருக்கும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ளும் மாநாடு அடுத்த மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
ப்ரிக்ஸ் மாநாட்டிற்கு முன் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்புக்கு, ப்ரிக்ஸ் மாநாட்டை நடத்தும் நாட்டின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். கடந்த ஆண்டின் ப்ரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்தியது. இந்த மாநாடு கோவாவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment