காணாமல் போன அமெரிக்க கடற்படை வீரர்கள் சடலமாக மீட்பு

266 0

அமெரிக்க கடற்படை கப்பல், பிலிப்பைன்ஸ் நாட்;டின் பிட்ஸ்ஜெரால்ட் கொள்கலன் கப்பலுடன் மோதியதை அடுத்து காணாமல் போன 7 அமெரிக்க மாலுமிகளும் பலியானதாக அமெரிக்க கடற்படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் காணாமல் போன மேலும் மூன்று மாலுமிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது ஜப்பானில் உள்ள மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜப்பானிய கடற்பிராந்தியத்திற்கு அப்பால் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் அமெரிக்க கடற்படை கப்பல் பாரிய சேதத்திற்கு உள்ளாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment