முதல்வர், தினகரன் மீதான வழக்குப்பதிவு பரிந்துரை வரவேற்கத்தக்கது!

265 0

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரின் பேரில் முதல்வர், தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாண்டியராஜன் கூறினார்.

நெல்லையில் இன்று அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடை பெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. வின் மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, செம்மலை, மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் இன்று மதியம் நெல்லை வந்தனர்.

பின்னர் அவர்கள் கூட்டம் நடைபெறும் மைதானத்தை சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். பேட்டியின் போது கே.பி.முனுசாமி கூறியதாவது:-

எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் மு.க. ஸ்டாலின் எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தமிழகத்தில் இன்று மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார்கள். வரும் தேர்தலில் ஓ.பி.எஸ். தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மா.பா.பாண்டியராஜன் கூறியதாவது:-

தமிழக அரசியலை பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் எம்.எல்.ஏ. சரவணன் பேசும் போது கூறியது மார்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது. 3 மாதங்கள் கழித்து இதை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இதில் உள் நோக்கம் இருக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரின் பேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி. தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

பா.ஜனதாவிற்கு நாங்கள் ஒரு போதும் கருவியாக இல்லை. 3 மாதத்தில் தமிழகத்தில் பலம்பெறுவோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியது இதுவரை அவர்கள் பலவீனமாக இருப்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment